Friday, January 21, 2011

ஹைக்கூ கவிதைகள்

நண்பர் கவிஞர். இளங்காடு திருமாறன் அவர்கள் விகடனுக்காக
அனுப்பிய ஹைக்கூ கவிதை தொகுப்பு. ஹைக்கூ என்பதை
தமிழில் சொல்வனம் என மொழிபெயர்த்திருக்கிறார்.

சொல்வனம்


எல்லாவற்றையும் அடகுவைத்தோம் .
நம்பிக்கையை
திருப்பிக்கொண்டு.


உற்பத்திகள் ஏராளம்
விற்பனை குறைவு
தமிழ்ப்பட்டதாரிகள்.


வசந்தக்கூரைகளுக்குள்
ஓட்டை போட்டது
வறுமைமழை.


கதவை திறந்ததும்
காற்றுடன் வந்தது
கொசு.


வியப்புக்குறிகள்
வினாக்குறிகளாயின
அவளின் அழைப்பிதழ் .


அக்காவின் கிழிந்த ஆடை
தரைமட்டமாகிபோனது
தங்கையின் ஆசை.


பூக்களுக்கு என்ன கவலை
காம்புகளுக்கு அல்லவா
கழுத்துவலி .

-இளங்காடு இரா.திருமாறன்.